Aran Sei

டெல்லி கலவரத்தில் காயமடைந்தவர் வழக்கைச் முறையாக நடத்தாத காவல்துறை – 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

டந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு நபரின் வழக்கை நியாயமற்ற முறையில் விசாரித்ததாக டெல்லி காவல்துறைக்கு டெல்லி நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

டெல்லி வடக்கு கோண்டாவைச் சேர்ந்த முகமது நசீர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய மறுத்ததற்காக கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

புகார்தாரர் மீது கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு காவல்துறையினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது என தெரிவித்த நீதிபதி, டெல்லி காவல்துறையின் மேல்முறையீட்டை வழக்கை ரத்து செய்துள்ளர்.

”இந்த வழக்கை எந்தக் கோணத்தில் பார்த்தாலும், விசாரணையின் செயல்திறன் மற்றும் நியாயம்குறித்து என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை,” என்ற நீதிபதி, விசாரணை ”மிகவும் சாதாரண, இரக்கமற்ற மற்றும் கேலிக்குரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

”குற்றசாட்டப்பட்ட நபர்களால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதாக மனுதாரரின் புகார்குறித்து காவல்துறையினர் கவலைப்படவில்லை” என நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

பெருமையோடு திரியும் ஜாமியா துப்பாக்கிச் சூடு நடத்தியவன் – கவலையற்று இருக்கும் காவல்துறை

விதிக்கப்பட்டிருக்கும் ரூ. 25 ஆயிரம் அபராதத்தை, இன்னும் ஒரு வாரத்திற்குள் டெல்லி சட்டப் பணிகள் ஆணையத்திடம் வழங்குமாறு காவல்துறை துணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சட்டப்பூர்வ கடமைகளில் படுதோல்வி அடைந்த பஜன்புரா காவல்நிலைய அதிகாரி மற்றும் அவரின் கீழ் பணிபுரிவர்களிடம் இருந்து இந்த அபராதத் தொகையைப் பிடித்தம் செய்யுமாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

‘அசாம் கால்நடை பாதுகாப்பு மசோதா வகுப்புவாத சம்பவங்களைத் தூண்டும்’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி, தனது சகோதரியை மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்த நீசிரின் வாகனம், கஜூரி சௌக்கை அடைந்தபோது அவரது கார் இடைமறிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக நரேஷ் தியாகி என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் நசீரின் இடது  கண்ணில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைகாக அவர் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மார்ச் 12 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்