Aran Sei

விசாரணையின் போது உமர் காலித், காலித் சைஃபிக்கு கைவிலங்கிட வேண்டும் –  டெல்லி காவல்துறையின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்

டெல்லியில் கலவரத்தில் தொடர்பிருப்பதாகக் கைது செய்யப்பட்ட ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் உமர் காலித், காலித் சைஃபி ஆகியோருக்கு விசாரணையின்போது கைவிலங்கிட வேண்டும் என்று கோரிய காவல்துறையின் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், இது போன்ற மனுவைத் தாக்கல் செய்ததற்கான விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் ‘உயர் ஆபத்தான கைதிகள்’ எனக்கூறி மனுத்தாக்கல் செய்த டெல்லி காவல்துறையின் மூத்த காவல்துறை அதிகாரி முடிவெடுத்ததை தொடர்ந்து, சிறை பொறுப்பாளரால் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக, நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

”உயர் ஆபத்துக் குற்றவாளிகள் என்றால் என்ன?. சிறைத்துறை விதிகள், பஞ்சாப் காவல்துறை விதிகள் அல்லது டெல்லி காவல்துறையின் அறிக்கைகளில் இது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா” எனச் சிறப்பு அரசு வழக்கறிஞர் மனோஜ் சவுத்ரியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

டெல்லி கலவரம் – முஸ்லீம்களை தாக்க கலவரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதா?

காவல்துறையின் இந்த உடனடி மனுக்கள்மீது தனக்கு  எதுவும் தெரியாது என்றும், இது தொடர்பாக அறிவுறுத்தல்களை ஏற்க இயலாது என மனோஜ் சவுத்ரி பதிலளித்துள்ளார்.

டெல்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு தொடர்ப்பட்டு இருவரும் சிறையில் உள்ளனர். அந்த வழக்குகளின் மீதான விசாரணை மே 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Source : PTI

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்