Aran Sei

அம்னெஸ்டி தலைவருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கிய விவகாரம் – எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோர சிபிஐ இயக்குநருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

Credit: The Hindu

ம்னெஸ்டி இந்தியாவின் முன்னாள் தலைவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது தொடர்பாக அவரிடம் சிபிஐ இயக்குநர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவருக்கு எதிராக வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை திரும்பப் பெற  வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா செல்வதற்காக பெங்களூரு விமான நிலையத்ததிற்கு வந்த ஆகர் பட்டேலை தடுத்து நிறுத்திய குடியேற்ற அதிகாரிகள், அவருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருப்பதால், அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.

இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் ஆகர் பட்டேல் தாக்கல் செய்த மனுவை கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி பவன் குமார் விசாரித்தார்.

லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவதுவேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்என்றும் அது குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பயண உரிமையில் தடையற்ற கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாடு இருக்க முடியாது. அது அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதி என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், “தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரி செய்த தவறுக்கு பொறுப்பேற்று சிபிஐ இயக்குநர் எழுப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும். இது பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் அளிப்பதோடு, பொது மக்களின் பார்வையில் சிபிஐயின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய உதவும்என கூறியுள்ளார்.

தீர்ப்பு தொடர்பாக தெரிவித்துள்ள ஆகர் பட்டேல், “நீதிமன்றம் சரியானதைச் செய்திருக்கிறது. நான் தேவையில்லாமல் துன்புறுத்தப்பட்டேன்மன்னிப்பு வரும் என்று நம்புகிறேன். நான் எந்த தவறையும் செய்யவில்லை. அரசாங்கம் தான் தவறு செய்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்