Aran Sei

ஆர்யன் கானுக்குப் பிணை மறுத்த நீதிமன்றம் – உயர்நீதிமன்றம் செல்ல இருப்பதாக வழக்கறிஞர் தகவல்

போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிறையில் இருக்கு நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானுக்கு பிணை வழங்க மும்பை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தி தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் (என்சிபி) அக்டோபர் 3 ஆம் தேதி ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து சட்டவிரோதமான போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என என்சிபி நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் நிலையில், நடிகர் ஷாருக்கானை குறிவைத்து அவரது மகன்மீது போலியாக வழக்கு பதியப்பட்டுள்ளதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 17க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆர்யன் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு ஏற்கனவே மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் பிணை கோரி, மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், ஆர்யன் கான் உள்ளிட்டோர் தரப்பில், மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமின் தர மறுப்புத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இது குறித்து பேசியுள்ள ஆர்யன் கானின் வழக்கறிஞர் அமித் தேசாய்  “நாங்கள் முதலில் ஆர்டரைப் படிக்க வேண்டும். எனக்கு இன்னும் ஆர்டர் கிடைக்கவில்லை. உத்தரவு கிடைத்தவுடன் நாங்கள் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source: News18

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்