Aran Sei

கொரோனாவால் வேலை இழந்தவர்களின் பொருளாதார உதவிக்கான கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள் – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Image Credits: The Hindu

கொரோனா காலத்தில், வேலை இழந்த தனியார் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குப் பொருளாதர உதவிகள் வழங்குவது தொடர்பான கோரிக்கையைப் பரிசீலனை செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் காளிமுத்து மைலவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து போது, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதன்மை இந்த வழிகாட்டுதலை வழங்கியது.

கொரோனாவால் வேலை இழப்பு மற்றும் ஊதிய குறைப்பிற்கு உள்ளான தனியார் அல்லது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குப் பொருதாளார ரீதியாக உதவிட, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ளது போன்று இந்தியாவிலும் தேசிய மற்றும் மாநில அளவிலான உயர்மட்ட குழுக்களை அமைக்க வேண்டும் என்று ஏப்ரல் 16 ஆம் தேதி வைத்தை கோரிக்கை பரிசீலனை செய்யுமாறு மனுதாரர் அந்த மனுவில்  தெரிவித்திருந்தார்.

தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்த மத்திய அரசு – தானாக முன்வந்து வழக்கு பதிந்த உயர்நீதிமன்றம்

மேலும், ”வேலை பார்ப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. அரசியலமைப்பின் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்வாதார உரிமையைப் பறிக்கும் விதமாக மத்திய அரசால் ஊடரங்கு அமல்படுத்தபட்டது” என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட முழு அல்லது பகுதி  ஊரடங்கின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு பொருளாதார உதவிகள்மூலம் ஈடு செய்யவேண்டியது அரசின் கடமை என மனுதாரர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்