Aran Sei

முசாபர்நகர் கலவர வழக்கை நடத்த அரசு மறுப்பு – குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்த நீதிமன்றம்

டந்த 2013 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த முஸாபர்நகர் கலவரத்தில் சம்பந்தப்பட்ட 12 பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் மீதான மனுவை அரசு வழக்கறிஞர் திரும்பப்பெற்றுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேசம் உன்னாவில் மீண்டும் பயங்கரம் – 2 தலித் சிறுமிகள் சடலமாக மீட்பு; ஒருவர் கவலைக்கிடம்

2013 ஆம் ஆண்டு முஸாபர்நகர் கலவரத்தின்போது 62 பேர் உயிரிழந்தனர். மேலும் 50,000 மேற்பட்டவர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

அந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் வழக்கைத் திரும்பப்பெறுவதாக நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து நீதிபதி அதை ஏற்று வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் – உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத் அறிவிப்பு

இந்த வழக்கில் அம்மாநில அமைச்சர் சுரேஷ் ராணா உட்பட பன்னிரண்டு பாஜகவினர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தாக தி வயர் செய்தி கூறுகிறது.

முஸாபர்நகர் கலவரத்திற்கு காரணமான 12 பேர்மீதும் அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உட்பட எண்ணற்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பதவிக்காலத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெறும் அதிகாரிகள்’ – அரசின் அழுத்தம்தான் காரணமா?

இந்நிலையில் அம்மாநில அரசு வழக்கறிஞர் ,” பாஜக தலைவர்கள்மீது வழக்குத் தொடரக் கூடாது என உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. எனவே இந்த வழக்கைத் திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறிய வேண்டுகோளை ஏற்று சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்