Aran Sei

‘பத்திரிகை துறை சில தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது’ – மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

நாடெங்கும் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது என ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

ஊடக நிகழ்வொன்றில் பேசிய அவர், ” நாடெங்கும் தற்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது. நான்காம் தூணாக இருக்கும் ஊடகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே, நாளுக்கு நாள் உண்மை செய்தி என்பது குறைந்து கொண்டே வருகிறது” என்றும் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

புறவாசல் வழியே கல்விச் சேர்க்கை நடைபெறுவதை தடுக்க வேண்டும் – டெல்லி உயர்நீதி மன்றம்

மேலும்,”பத்திரிகை துறை மெல்ல சில தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதை நான் பார்க்கிறேன். இதிலிருந்து பத்திரிக்கையை எவ்வாறு மீட்டெடுப்பது குறித்து  நான் அடிக்கடி சிந்தித்து வருகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, உண்மையான செய்திகள் மக்களைச் சென்றடைவதை பிரச்சாரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.

‘ஜனநாயகத்தின் அனைத்து தூண்களையும் பலவீனப்படுத்துவதுதான் பாஜகவின் சித்தாந்தம்’ – காங்கிரஸ் விமர்சனம்

மேலும், ஒருவேளை யாரேனும் பத்திரிக்கை துறையை உயிர்ப்போடு வைத்திருக்க விரும்பினால் சிறந்த வழியில் உண்மை செய்திகள் மக்களைச் சென்றடைய செய்ய  வேண்டும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

Source:The new indian express

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்