Aran Sei

மத ரீதியாக தீண்டாமையை கடைபிடிக்கும் பாஜக அரசு – மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அரசின் குழு அறிக்கை

ன்னாட்டளவில் மத சுதந்திரம் (USCIRF) குறித்து ஆராயும்  பன்னாட்டு மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா அரசின் குழு, இந்தியாவை ” குறிப்பிட்ட மதத்தின் மீது அக்கறை கொண்ட நாடு” என்ற பிரிவின் கீழ் சேர்க்க  பரிந்துரைத்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பேத்கரின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சமூக ஒழுங்குக்கு தனியார்மயம் நல்லதா? – ஆனந்த் டெல்டும்ப்டே

இதுகுறித்த தெரிவித்துள்ள அக்குழுவின் தலைவர் கைலே மான்சின், கடந்தாண்டு கொரோனவால் ஏற்பட்டிருந்த சவாலைச் சமாளிக்க பல நாடுகள் சுகாதாரத்துறைக்கு முக்கியம் அளித்த அளவுக்கு, மத நம்பிக்கைகளுக்கும் முக்கியமளிக்கப்பட்டுள்ளதாகத் கூறியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

இந்த அமைப்பு உலகளவில் 14 நாடுகளை குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடு என்ற பிரிவில் பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்த அரசுகள் திட்டமிட்டு நடந்த வன்முறைகளை ஊக்குவித்தது அல்லது ஆதரித்தது என்றும் தெரிவித்துள்ளதாக அறிக்கை  குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆர்எஸ்எஸின் இந்து ராஜ்ஜிய திட்டத்தை செயல்படுத்தாதீர்கள்” – மத்தியஅரசை வலியுறுத்திய சீக்கிய குருத்துவார் குழு

குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடுகள் பட்டியலில் பர்மா, சீனா, எரித்திரியா, ஈரான், நைஜீரியா, வட கொரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், இந்தியா, ரஷ்யா, சிரியா, மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைப் பரிந்துரைத்துள்ளதாக அந்தச் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், “பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, இந்து (ராமராஜ்ஜியம்) நாடு அமைப்பதற்கான  திட்டங்களை ஊக்குவித்துத் தொடர்ச்சியாக மத சுதந்திரத்தில் தலையிட்டு வருகிறது. குறிப்பாகக் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வழியாக மத ரீதியாக தீண்டாமையை கடைபிடித்து வருகிறது”. என்று  அமெரிக்க அறிக்கை கூறுகிறது.

’ஆன்லைன் ஊடகத்தின் கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும்’ – பிரதமருக்கு பத்திரிகையாசிரியர் சங்கம் கோரிக்கை

மேலும், கடந்தாண்டு நடந்த டெல்லி கலவரம் குறித்தும் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் மத சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட வன்முறையில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் மீது அரசு செயலற்றத் தன்மையில் செயல்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்தியாவில் ஜனநாயகம், இன்னும் இளமையாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது. மதத்தினால் ஏற்படும் பதட்டங்களால் அரசியல் மோதல்களை அதிகரிக்க அனுமதிப்பதை இந்தியா எப்போதும் எதிர்க்க வேண்டும். இந்திய அரசு சமூக அமைதியை சிதைப்பதின் வழியே எதையும் இழந்துவிடக்கூடாது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இதுதான் இந்தியாவிற்கு முக்கியம். இந்தியாவிற்கு அதுவேகட்டாயம்” என்று பன்னாட்டு மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா அரசின் குழுவின் ஆணையர் ஜானி மூர் தெரிவித்துள்ளார்.

 

Source: the wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்