Aran Sei

வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவே கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு: நிதி அமைச்சகம் தகவல்

மாநிலங்களவையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், பினாய் விஷ்வம், “இந்தியாவில், கொரோனா பெருந்தொற்று சமயத்தில், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும், சொத்து மதிப்பும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதா? என்றும் ஏழைகளுடைய எண்ணிக்கையும் அதிகரித்து 70 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்திருக்கிறதா? என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

மேலும், கடந்த நான்காண்டுகளில் நேரடி மற்றும் மறைமுக வரியின் வித்தியாசம் எவ்வளவு எனவும் கடந்த நான்காண்டுகளில், கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டதற்கும் மறைமுக வரிகள் அதிகப்படுத்தப்பட்டதற்கும் காரணம் என்ன எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய இணை நிதியமைச்சர், பங்கஜ் சவுத்ரி, இருக்கின்ற தரவுகளின் அடிப்படையில், 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில்,  2019-20 ஆம் ஆண்டில் 141 நபர்கள் இருந்ததாகவும், 2020-21 ஆம் ஆண்டில், 136 நபர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அம்பானி, ஒரு மணிநேரத்தில் சம்பாதித்ததை, தொழிலாளி சம்பாதிக்க 10,000 ஆண்டுகளாகும் – ஆக்ஸ்ஃபாம்

மேலும், “கொரோனா பெருந்தொற்று சமயத்தில் எவ்வளவு பேர் ஏழைகள் ஆனர் என்ற அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லை. இனி தான், ஆய்வுகளும் கணக்கெடுப்புகளும் நடக்கப்பட்டவுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

“நக்சலைட்டுகள் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்” – சத்தீஸ்கர் முதல்வர்

மேலும், நேரடி வரிக்கும் மறைமுக வரிக்கும் இடையேயான வித்தியாசம் தொடர்பான தகவல் பட்டியலையும் அவர் அளித்துள்ளார்.

நிதியாண்டு நேரடி வரி

(கோடிகள்)

மறைமுக  வரி

(கோடிகள்)

மொத்த வரி வருவாய்

(கோடிகள்)

மொத்த வரியில் நேரடி வரியின் விகிதம்

(கோடிகள்)

மொத்த வரியில் மறைமுக வரியின் விகிதம்

(கோடிகள்)

2017-18 10,02,633 9,11,651 19,14,284 52.38 47.62
2018-19 11,37,552 9,37,321 20,74,873 54.83 45.17
2019-20 10,50,711 9,53,513 20,04,224 52.42 47.58
2020-21 9,45,379 10,74,894 20,20,273 46.79 53.21

 

`பஞ்சத்தின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்’- நோபல் பரிசு பெற்றவர் கோரிக்கை

கார்ப்பரேட் வரி குறைப்பு மற்றும் மறைமுக வரி அதிகரிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “ உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருவதால், மறைமுக வரியையும் அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தியாவில் முதலீடுகளை அதிகளவு கொண்டு வந்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவே கார்ப்பரேட்டுகளுக்கான வரிகள் குறைக்கப்படுகிறது” என ஒன்றிய இணை நிதி அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்