Aran Sei

“கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்பது திருவிழா அல்ல” – பிரதமருக்கு ராகுல் காந்தி பதில்

Image Credits: National Herald

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்பது தீவிரமான பிரச்னை, திருவிழா அல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிக மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் விதமாக தடுப்பூசி திருவிழாவை ஏப்ரல் 11 முதல் 14 வரை நடத்த வேண்டும் என மோடி தெரிவித்திருந்ததற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி இதனைக் கூறியுள்ளார்.

‘கொரோனா மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறையுங்கள்’ – மத்திய அரசிடம் சத்தீஸ்கர் முதல்வர் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால், பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டிருப்பவை தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிகளின் பற்றாக்குறை என்பது மிகவும் தீவிரமான பிரச்சினை. இது ஒரு “திருவிழா”அல்ல. நாட்டு மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது சரியானதா? எந்தவித சார்பு இல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உதவ வேண்டும். இந்தத் தொற்றுநோயை நாம் அனைவரும் ஒன்றாக தோற்கடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்தவொரு ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லையெனத் தெரிவித்திருந்த வெளியுறவு அமைச்சகம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வெளிநாடுகளில் வழங்குவது தொடரும் அதே நேரத்தில் நாட்டின் உள்நாட்டு தேவைகள் கவனிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது.

கடந்த ஐந்து நாட்களில் நான்காவது முறையாக இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, மொத்த பாதிப்பு 1.3 கோடிக்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்