Aran Sei

தேர்தல் பணியின் போது கொரோனால் உயிரிழந்த 1600 ஆசிரியர்கள் – 3 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்க உ.பி. அரசு முடிவு

த்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றியபோது கொரோனா தொற்று ஏற்பட்டு 1600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், 3 பேருக்கு மட்டும் இழப்பீடு வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

”உத்திரபிரதேச தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வீட்டில் இருந்து தேர்தல் பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வரை மட்டுமே தேர்தல் பணி ஆக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த நேரத்தில் உயிரிழந்தவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க முடியும்” என ஆரம்ப கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுவரை 3 ஆசிரியர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

ஒன்றிய அரசை விமர்சிக்கும் சர்வதேச ஊடகங்கள் – இந்தியாவின் கருத்தை தெரிவிக்க பன்னாட்டு தொலைக்காட்சி தொடங்க தூர்தர்ஷன் திட்டம்

மூன்று பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற உத்திரபிரதேச அரசின் இந்த முடிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆசிரியர்கள் சங்கத்தினர், ”உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்துவது மற்றும் அரசுக்கு எதிராக சட்டரீதியாக வழக்கு தொடர்வோம்.” என தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் 1621 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள உத்திரபிரதேச பிரதாமிக் ஷிக்ஷக் சங்கம், ”அனைவரும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளது.

Source : Telegraph India

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்