உத்தரகண்ட் மாநிலம் பகீரதியில் உள்ள கேதார் காட் ஆற்றங்கரையில், பாதி எரிந்த பிணங்களை நாய்கள் சாப்பிடும் காணொளி சமூக வலைதளங்களைப் பகிரப்பட்டு வருகிறது.
DISTURBING VISUALS of stray dogs digging & feeding on the dead bodies, on the banks of river Ganga, in Prayagraj.
Govt failed to protect their life, at least protect their dignity? This is what BJP & Godi Media doesn't want you to see and hence trying to deviate via smokescreens pic.twitter.com/Mc8VYb3sWE
— Gaurav Pandhi (@GauravPandhi) May 18, 2021
கங்கையின் கிளை நதியில், சடலங்கள் வீசப்பட்டிருக்கலாம் என்றும், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர் மட்டம் உயர்வதற்கு முன்னர் உடல்கள் மணல் கம்பிகளில் சிக்கி, கரைகளை நோக்கி ஒதுங்கியிருக்கலாம் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சடலங்களின் வாடை தெரு நாய்களை ஈர்த்தை அடுத்து, அவை அந்த உடல்களை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக திங்கள்கிழமை (மே 31) ஆம் தேதி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இது தொடர்பாக எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை என பெயர் கூற விரும்பாத ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நகர் மன்ற தலைவர் ரமேஷ் செம்வால், “படித்துறையில் பாதி எரிந்த உடல்களை நாய்கள் உண்ணுவதை காண முடிந்தது. இறுதி சடங்குகள் முடிந்த பிறகு, அந்தப் பகுதியைச் சுத்தம் செய்யப் படித்துறையில் வசிக்கும் சாது ஒருவரை நியமித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
வேறு இடங்களில் இருந்து மிதந்து வந்த உடல் மீண்டும் தண்ணீர் மிதப்பதற்கு இங்கே புகைக்கப்படுவதல் நல்லது என கூறிய ரமேஷ் செம்வால், அந்த உடல்கள் ஏன் பாதி எரிந்த நிலையில் இருந்தன மற்றும் அத்தகைய உடலின் பகுதிகளைச் சாது எவ்வாறு ’சுத்தம் செய்வார்’ என்பது குறித்து விளக்கமளிக்கவில்லை.
உத்தரப்பிரதேசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ள ஆறுகளில் சடலங்கள் மிதப்பதைக் காண முடிகிறது. கொரோனா இறப்புகள் அதிகரித்து வருவதால், தகனம் செய்யும் இடம் மற்றும் விறகு பற்றாக்குறை, அதிகரித்து வரும் இறுதிச் சடங்கு செலவுகள் ஆகியவற்றின் காரணமாக உடல்கள் உறவினர்களால் தூக்கி எறியப்படுகின்றன. பல குடும்பங்கள் இறந்தவர்களை ஆற்றங்கரையில் மணலில் புதைத்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரங்களில் 40க்கும் அதிகமான உடல்கள் ஆறுகளில் மிதப்பதை கண்டதாக உத்திரபிரதேசத்தின் உன்னாவ் மற்றும் ஃபதேபூர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
”ஆற்றில் சடலங்கள் மிதப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. அவை நீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.” என ஃபதேபூர் துணை கோட்ட நீதிபதி பிரகாஷ் ஜா தெரிவித்தார்.
இதே வேளையில், “நான் அந்த பகுதிக்கு சென்றேன். அங்கு எந்த உடல்களையும் பார்க்க முடியவில்லை.” என உன்னாவ் துணைக் கோட்ட நீதிபதி தயாசங்கர் பதக் கூறியுள்ளார்.
ஆறுகளில் சடலங்கள் மிதப்பது குறித்து உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத் இதுவரை மௌனம் காத்து வருகின்றனர். மேலும், தங்கள் மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என கூறுகின்றனர்.
Source : Telegraph
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.