Aran Sei

குழந்தைகளுக்கான தடுப்பு மருந்தை முழுதும் பரிசோதனை செய்யுங்கள்- ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ருத்துவ சோதனை (clinical trials) முழுமைபெறாமல்  குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பு மருந்துசெலுத்தப்பட்டால் அது  பேரிடராகும் என டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், மருத்துவ சோதனைகள் முடிந்த பிறகு 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டுமெனவும்,12-17 வயதுக்கு உட்பட குழந்தைகளுக்கு உடனடியாக தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டும் என  சிறார்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என் .படேல் மற்றும் ஜோதி சிங் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

ஒன்றிய அரசின் சட்டங்களும் – நிலைமை மாறாத ஜம்மு காஷ்மீரும்

மேலும், இதுகுறித்து தெரிவித்த நீதிமன்றம்,”மருத்துவ சோதனைகள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட வேண்டும். மருத்துவ சோதனைகள்  முழுமையாக முடிவுறாமல் குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து செலுத்துவதென்பது பேரிடருக்கு ஈடாகும். மருத்துவ சோதனைகள் முடிந்ததும் குழந்தைகளுக்கு உடனடியாகச் செலுத்தி விடுங்கள். அதற்கு தான் நாடு காத்துக் கிடக்கிறது” என்று வலியுறுத்தி உள்ளதாகவும் தி இந்து செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

டேனிஷ் சித்திக்கி: உண்மைக்கு ஒளியூட்டிய மக்கள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்

இந்நிலையில், இதற்குப் பதிலளித்த ஒன்றிய அரசு,”குழந்தைகளுக்கான தடுப்பு மருந்துக்கான மருத்துவ பரிசோதனைகள் முடியும் தருவாயில் உள்ளது. வல்லுநர்கள் ஒப்புதல் அளித்ததும் செலுத்தப்படும்” என்று  கூறியுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்