Aran Sei

கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்கு 10% வரி தள்ளுபடி – மத்திய அரசு முடிவு

றக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 10 விழுக்காடு வரி தள்ளுபடி செய்யப்படலாமென மூத்த அரசு அதிகாரி தெரிவித்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 1 ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், உற்பத்தியில் 50 விழுக்காடு வரை நேரடியாக மாநில அரசுகளுக்கும், வெளிச்சந்தைகளிலும் விற்பனை செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.

ஆல்கஹாலால் கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் பாதிக்குமா? – கேள்விக்குப் பதிலளித்த மத்திய அரசு

இந்நிலையில், வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கான விலையை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக் அந்த அதிகாரி தெரிவித்திருந்தார்.

கொரோனா தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாகத் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி செய்து விரைவில் இந்தியாவிற்கு வரவிருக்கும் நிலையில், ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட ஜாண்சன் நிறுவனங்கள், தங்களை மருந்தகளை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்திவருகின்றன.

இந்தியாவில் வீணாகும் கொரோனா தடுப்பூசி; தமிழகம் முதலிடம் – தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த பதில்

இது தொடர்பாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்குப் பதிலளிக்க நிதித்துறை செய்தித் தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான நேபாளம், பாகிஸ்தான் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளான அர்ஜண்டினா, பிரேசில் ஆகிய நாடுகள், கொரோனா தடுப்பூசிகளுக்கு 10 முதல் 20 விழுக்காடு வரை வரி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : Reuters

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்