Aran Sei

மூன்றாவது நாளாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்பு – உலகின் நான்கில் ஒரு கொரோனா உயிரிழப்பு இந்தியாவில்

ந்தியாவில், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக, 3 ஆயிரத்துக்கும் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஏப்ரல் 28-ம் தேதி நிலவரப்படி உலக அளவில் ஏற்படும் கொரோனா தொற்று உயிரிழப்புகளில் நான்கில் ஒன்று இந்தியாவில் ஏற்படுகிறது.

நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 3.8 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுகள் உறுதியாகி இருக்கிறது. ஒரே நாளில் 3,86,795 பேருக்குத் தொற்று உறுதியாகி இருப்பதன் மூலம் இந்தியாவின் மொத்த தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,87,55,126 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 66,159 பேருக்கும், அதனைத் தொடர்ந்து கேரளாவில் 38,607 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 35,156 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிக்கிறது.

கொரோனா இரண்டாவது அலை பரவலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எண்ணிக்கையை குறைத்து காட்டும் நிர்வாகம்

மேலும், கொரோனா தொற்றால் இதுவரை 2,08, 255 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 771 பேரும், டெல்லியில் 395 பேரும், உத்தரபிரதேசத்தில் 298 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் சராசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,882 ஆக உள்ளது. இது உலகின் மற்ற எந்த நாடுகளின் சராசரியை விட அதிகமாகும்.

அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, இந்தியா,  பிரிட்டன் என அதிக உயிரிழப்புகள் ஏற்படும் முதல் 5 நாடுகளில், இந்தியாவில் மட்டும் தான் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே  போகின்றன.

Photo Credit : The Hindu

மேலும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படுவது குறைந்து இருக்கிறது. ஏப்ரல் 28-ம் தேதி செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களை விட 3.6 லட்சம் டோஸ்கள் குறைவாக, ஏப்ரல் 29-ம் தேதி 21.9 லட்சம் தடுப்பூசிகளே  செலுத்தப்பட்டுள்ளன.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்