Aran Sei

‘இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது; 8 வாரங்கள் நீடிக்கும்’ – எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா

ந்தியாவில் மூன்றாவது அலை ’தவிர்க்க முடியாதது’ என்றும், அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு நாட்டைத் தாக்கக்கூடும் என்றும் எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

நாட்டின் முக்கிய சவால் பெரிய மக்கள் தொகை தடுப்பூசி போடுவதாகும். இதனை சமாளிக்க, அதிக மக்களை பாதுகாக்க கோவிஷீல்டுக்கான டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிப்பது ’மோசமான அணுகுமுறையாக இருக்காது’ என விளக்கியுள்ளார்.

கொரோனா வைரஸின் திடீர் மாற்றத்தை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தி, கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஒரு புதிய எல்லையை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

”ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்திருப்பது, கொரோனா கட்டுப்படுத்து பணியில் பின்னடைவை ஏற்படுத்திகிறது. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையில் நாங்கள் (அரசு) எதையும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. மீண்டும் கூட்டம் கட்டமைக்கப்படுகிறது… மக்கள் கூடி வருகின்றனர். தேசிய அளவில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.’ என அவர்கள் தெரிவித்துள்ளார்.

“மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது மற்றும் அது நாட்டை 6 முதல் 8 வாரங்கள் நாட்டைக் தாக்கக்கூடும்… இவை நாம் கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் கூட்டத்தை ஆகியவற்றின் அடிப்படையில் நாம் எவ்வாறு முன்னேறுகிறோம் என்பதைக் பொறுத்தது” என அவர் கூறியுள்ளார்.

Source : NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்