Aran Sei

ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 30 துறவிகளுக்கு கொரோனா: கும்பமேளாவில் இருந்து வெளியேறிய துறவிகள் குழு

த்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 30 இந்து மத துறவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து, அகில இந்திய அகதா பரிஷத்தின் தலைவர் மகாந்த் நரேந்திர கிரி உட்பட 30 பேரும் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு பிரபல இந்து மத துறவியான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுவாமி கபில் தேவ், டெஹ்ராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஹரித்வார் கும்பமேளாவில் ஒரே நாளில் 13 லட்சம் பேர் நீராடல் : காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்

இந்நிலையில், இந்தக் கும்பமேளாவில் பங்கேற்ற 13 க்கும் மேற்பட்ட இந்து மத துறவிகள் குழுக்களில் இரண்டாவது பெரிய குழுவான  நிரஞ்சனி அகதா, தங்கள் குழுவில் உள்ள துறவிகள் பலருக்கு தொற்று அறிகுறிகள் இருப்பதால், இனி ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

ஹரித்வார் கும்பமேளாவில் பரவி வரும் கொரோனா தொற்று தொடர்பாக பேசிய ஹரித்வார் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.கே.ஜா, “இப்போது வரை, 30 துறவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தத் தொற்று பரவல் எந்தவொரு குறிப்பிட்ட இந்து மத துறவிகள் குழுவுக்கு மட்டும் பரவவில்லை. மாறாக,  நிரஞ்சினி, ஜூனா உட்பட கிட்டத்தட்ட அனைத்து குழுக்களுக்கும் பரவியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்