கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு டெல்டா கொரோனா தான் காரணம் என ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவின் டெல்டா மாறுபாடு, இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆல்ஃபா மாறுபாட்டை விட அதிக தொற்றை ஏற்படுத்தக்கூடியது என நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய ஆய்வு மையம் கூறுகிறது.
ஆல்ஃபா மாறுபாட்டை விட டெல்டா மாறுபாடு 50 விழுக்காடு அதிக தொற்று உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
டெல்டா மாறுபாடு அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. ஆனால், டெல்லி, ஆந்திரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் டெல்டா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசிக்கு பிறகான தொற்று சதவீதம் ஆல்ஃபா மாறுபாட்டை விட டெல்டா மாறுபாடில் அதிகமாக உள்ளது என நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய ஆய்வு மையம் கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.