Aran Sei

ஆக்சிஜன் தேவைக்கு நாங்கள் யாரிடம் பேச வேண்டும் – பிரதமரிடம் கேள்வி எழுப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்

க்சிஜன் தேவைக்காக நாங்கள் யாரிடம் தான் பேச வேண்டும் என பிரதமர் மோடியிடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

”தயது செய்து, எங்களுக்கு வழிகாட்டுங்கள்” என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

“டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரிய அளவில் இருக்கிறது. டெல்லியில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகள் இல்லையென்றால், டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கக் கூடாதா?.  டெல்லிக்கு பிற மாநிலங்களிலிருந்து வரும் ஆக்சிஜன் டேங்கர்கள் வழியில் தடுத்து நிறுத்தப்படுகிறது. இது போன்ற நிகழ்வின்போது மத்திய அரசில் இருக்கும் யாரிடம் பேச வேண்டும் என்பதை பரிந்துரை செய்யுங்கள்” என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனாவும் மன நலமும்: மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

மேலும், டெல்லி அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து வான் வழியாக ஆக்சிஜனை எடுத்துவர வசதிகளை செய்து தருமாறு பிரதமர் மோடியை அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

”டெல்லிக்கு ஆக்சிஜன் ஏற்றி வரும் லாரிகளைத் தடுத்து நிறுத்தும் மாநிலங்களின் முதலமைச்சர்களை தொலைபேசி தொடர்புக் கொண்டு, லாரிகள் விடுவிக்குமாறு அறிவுருத்துங்கள்” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்