Aran Sei

‘கொரோனா கிருமி ஒரு உயிர்; நம்மை போன்று அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு’ – உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் கருத்து

கொரோனா தொற்றுக் கிருமி ஒரு  உயிருள்ள உயிரி என்பதால், அதற்கும் உயிர்வாழ்வதற்கான உரிமை உள்ளது என்று பாஜகவை சேர்ந்த உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“மோடி எதிர்காலத்தில் வழிபடப்படுவார் ” – மோடியை ராமனுடன் ஒப்பிட்டு துதிபாடிய மாநில முதல்வர்

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர்,  “தத்துவார்த்த பார்வையில் பார்த்தீர்களானால், கொரோனா தொற்றுக் கிருமி ஒரு உயிருள்ள உயிரி; எனவே, நம்மை போன்று அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு. ஆனால் மனிதர்களாகிய நாம் நம்மை அறிவு ஜீவிகளாக நினைத்து தொற்றை கட்டுப்படுத்திவிட முடியும் என்று கருதுகிறோம். எனவேதான் தொற்று கிருமி தொடர்ந்து மாறுபாடடைகிறது.” என்று திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தர்காண்டில் புதிய முதல்வர் பதவியேற்பு – ” டெல்லியில் இருந்து மாநிலங்களை கட்டுப்படுத்துவதன் வரம்பைக் காட்டுகிறது “

திரிவேந்திர சிங் ராவத்தின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் அவரை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒருவர், கொரோனா தொற்று உயிரிக்கு சென்ட்ரல் விஸ்டா(புதிய நாடாளுமன்றத்தில்)வில் இடம் அளிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்