Aran Sei

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு – தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இதன்படி, கொரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கப்படும்.

துப்பாக்கி பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் – தமிழக ஆளுநர் ரவி

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்களில் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை என்றால் ஏழை மக்களுக்கு கல்வி கிடைக்காது – முன்னாள் துணை வேந்தர் ஜவகர் நேசன்

மேலும் இந்த மாணவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட வேண்டும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

எனக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது Tada Rahim Interview | My Legal Fight | கைதியின் டைரி – 07

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்