கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க சாத்தியமில்லை என்று, உலக சுகாதார அமைப்பின் நிபுணர் பீட்டர் பென் எம்பாரெக் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் ஊஹான் நகரத்தில் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளுக்கும் வைரஸ் பரவியது.
ஓரினசேர்கையாளரை பணி நீக்கிய அரசு – மீண்டும் பணியில் அமர்த்திய நீதிமன்றம்
இந்த வைரஸ், சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு சீன அரசின் மீது சில நாடுகளால் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கொரோனா வைரசை, ‘சீன வைரஸ்’ என்று அழைத்ததுடன், சீன அரசு வைரசை பரப்பியதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
இந்தக் கருத்தைச் சீன அரசு மறுத்தாலும், இதுகுறித்து சர்வதேச சுயாதீன விசாரணை நடத்த சீன அரசு மறுப்பு தெரிவித்தது.
டிராக்டர் பேரணி வன்முறை – காணாமல் போனவர்களை காவல் நிலையங்களில் தேடும் விவசாயிகள்
இறுதியாகக் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற, உலக சுகாதார மாநாட்டில் விசாரணை நடத்த அனுமதியளிக்க சீனா ஒப்புதல் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, உலகின் 10 நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள், உலக சுகாதார நிறுவனத்தின் சார்பாக, சில நாட்களுக்கு முன் சீனா சென்றனர்.
மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்களுக்கு சென்ற ஆய்வுக் குழுவினர், ஊஹான் நகரத்தில் உள்ள சர்ச்கைகுரிய விலங்குகள் சந்தையிலும் (இங்கிருந்துதான் வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது), ‘ஊஹான் வைரஸ் ஆய்வகத்திலும்’ (Whuhan Institute of Virology) ஆய்வு மேற்கொண்டனர்.
டிவிட்டர் கணக்குகளை முடக்கும் கோரிக்கை – மத்திய அரசுடன் டிவிட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை
அவர்கள் மேற்கொண்ட, ஆய்வின் முடிவுகளை ஆராய்ந்துள்ள, உலக சுகாதார அமைப்பின் நிபுணர் பீட்டர் பென் எம்பாரெக், கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.
“முதற்கட்ட முடிவுகளை பார்க்கும்போது, ஒரு உயிரினத்தின் வழியாகவே (வைரஸ்) பரவியிருக்க வேண்டும்” என்று கூறியுள்ள பீட்டர், இதுகுறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
“இருந்தபோதும், ஆய்வகத்திலிருந்து பரவியது என்ற அனுமானத்திற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு” என்ற பீட்டர் தெரிவித்துள்ளார்.
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களிலிருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் பீட்டர் பென் எம்பாரெக் தெரிவித்துள்ளார்.
Source: AP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.