Aran Sei

‘தடுப்பூசிகள் நமக்கு’சஞ்சிவி மூலிகை’; பிரமதரின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறது’ – மத்திய அமைச்சர்

கொரோனா தொற்றுத் தடுப்பூசிகளை ‘சஞ்சிவானி’ (சஞ்ஜீவி மூலிகை)என்று அழைத்துள்ள மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கொரோனா தொற்றுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தில் நாம் பிரதமரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜனவரி 16) அவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது, “இது ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க நாள். கொரோனா தொற்றுக்கு எதிரான நம்முடைய போராட்டத்திற்கு நாம் பிரதமரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். இது உலகின் மிகப்பெரிய கொரோனா தொற்று தடுப்பூசி திட்டம்.” என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி – உண்மையில் இது முழுமையான இந்திய தயாரிப்பா?

கடந்த ஒரு வருடத்தில் இந்தத் தொற்று நோய்க்கு எதிராக ஒரு வீரம் மிக்க போராட்டத்தை நம்மால் நடத்த முடிந்தது என்றும் செயல்திறன் மிக்க வழிமுறைகளைப் பின்பற்றியதன் வழியாக, உலகில் மிகக் குறைந்த இறப்பு விகிதம் இங்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான நம்முடைய போராட்டத்தில், இந்தத் தடுப்பூசிகள் ‘சஞ்சிவானி’ (சஞ்ஜீவி மூலிகை) ஆகும். போலியோ மற்றும் அம்மை நோய்களுக்கு எதிரான போர்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இப்போது, ​​கொரோனா தொற்றுக்கு எதிரான போரை வென்றெடுக்க வேண்டிய தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளோம்.” என்று ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

‘பாஜக தரும் கொரோனா தடுப்பூசியை நான் எப்படி நம்ப முடியும்?’ – அகிலேஷ் யாதவ்

இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்றும் மக்கள் வதந்திகளுக்குச் செவிசாய்க்காமல் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சொல்வதை நம்ப வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்