‘சீரம் இந்தியா’ நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்து 1000 ரூபாய்க்கு விற்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா, என்டிடிவி -யிடம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் விற்பனை தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“முதல் 10 கோடி தடுப்பு மருந்துகள், 200 ரூபாய்க்கு விற்கப்படும். அதன்பிறகு ஏலம் நடைமுறைப்படுத்தப்படும், பிறகு பல்வேறு விலைகளில் விற்கப்படும்” என்று பூனாவாலா தெரிவித்தாக என்டிடிவி கூறியுள்ளது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி – உண்மையில் இது முழுமையான இந்திய தயாரிப்பா?
“நாங்கள் மத்திய அரசிடம் கொடுக்க உள்ள மருந்தை அரசு இலவசமாக வழங்கவுள்ளது. அதேநேரத்தில், நாங்கள் சந்தையில் அந்த மருந்தை விலைக்கும் விற்கவுள்ளோம். அதன் அதிகபட்சவிலை 1000 ரூபாயாக இருக்கும்” என்று அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ள என்டிடிவி, ஒருவர் இரண்டு டோஸ்களை எடுக்க வேண்டியிருப்பதால், ஒரு முறை தடுப்பு மருந்த எடுத்துக்கொள்ள ஒருவர் 2000 ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா செனேகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கொரேனா தடுப்பு மருந்தை, சீரம் இந்தியா நிறுவனம், இந்தியாவில் உற்பத்தி செய்தது. தடுப்பு மருந்து சோதனைக்கு உட்படுத்தப்படும் முன்னரே, உற்பத்தியை தொடங்கிய சீரம் இந்தியா நிறுவனத்திடம் தற்போது, 5 கோடி தடுப்பு மருந்துகள் இருப்பதாக என்டிடிவி கூறியுள்ளது.
‘இந்தியர்கள் பரிசோதனை எலிகளா?’ – கொரோனா தடுப்பு மருந்து குறித்து சுப்பிரமணியன் சாமி கேள்வி
“அடுத்த 7 அல்லது 10 நாட்களில் அனைத்து வேலைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்புகிறோம். அதன்பிறகு ஒரு மாதத்தில் 7 கோடி முதல் 8 கோடி வரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ள அதார் பூனாவாலா, மார்ச் மாதத்திற்குப் பிறகு, உற்பத்தி இரட்டிப்பாகும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.