Aran Sei

கொரோனா தடுப்பு மருந்தை பதுக்கும் பணக்கார நாடுகள் – தென் ஆப்பிரிக்க அதிபர் குற்றச்சாட்டு

credits : ny times

லகின் பணக்கார நாடுகள் தேவைக்கு அதிகமாகக் கொரோனா தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்துக் கொள்வதால் மற்ற நாடுகளுக்குக் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமாஃபோசா குற்றம் சாட்டியுள்ளார்.

உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) காணொலி காட்சி மாநாடு சுவிட்சர்லாந்தின், தாவோஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில், உலகின் பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கியுள்ளனர் என்றும், சில நாடுகள் ஒரு படி மேலே சென்று, தன் நாட்டில் உள்ள மக்கள் தொகையைவிட நான்கு மடங்கு அதிகமான தடுப்பு மருந்துகளை பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

”40 லட்சத்தை மக்கள் தொகையாகக் கொண்டுள்ள நாடுகள், 1 கோடியே 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கி வைத்திருப்பது எதனால்?” என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார். எனவே, “பணக்கார நாடுகள் பதுக்கி வைத்திருக்கும் தடுப்பு மருந்துகளை திருப்பியளிக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒவ்வாமை உள்ளவர்கள் கோவிஷீல்ட் மருந்தை எடுக்கக்கூடாது: சீரம் இந்தியா நிறுவனம்

”ஒரு சில நாடுகள் மட்டும் தடுப்பூசியை போட்டுக் கொண்டு, மற்ற நாடுகள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை என்றால் அது அனைவருக்குமே ஆபத்தாக முடிந்து விடும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக, உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை பாராட்டிய அதிபர் சிரில், உலக சுகாதார அமைப்பு, தடுப்பு மருந்துகளை விநியோகிப்பதில், சமபங்கு இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது என்று கூறியுள்ளார்.

அம்பானி, ஒரு மணிநேரத்தில் சம்பாதித்ததை, தொழிலாளி சம்பாதிக்க 10,000 ஆண்டுகளாகும் – ஆக்ஸ்ஃபாம்

உலகின் அனைத்து பணக்கார நாடுகளும் தடுப்பூசிகளைப் வாங்கி வைத்து கொள்வதில் எவ்வாறு நடந்துகொள்கின்றன என்பதை உணர்ந்து, ஆப்பிரிக்காவில் தடுப்பூசி வேண்டும் என்கிறவர்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவாறு, குழு ஒன்று அமைக்கப்பட்டு, தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு வருவது ஓரளவு வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

காப்புரிமை வேண்டாம்; மக்களைக் காப்பாற்றினால் போதும்

இருப்பினும், ”தடுப்பூசிகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் அவற்றை திருப்பி அளிப்பது தான் எங்களுக்குத் தேவை.அது நடந்தால் தான் மற்ற நாடுகள் கொரோனா தடுப்பூசியை பெற முடியும்” என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் கூறியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்