Aran Sei

சிறையிலிருக்கும் பேரா. சாய்பாபாவுக்கு கொரோனா – மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மனைவி வேண்டுகோள்

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு  நாக்பூர் மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் இந்தியாவிற்கு எதிராகப் போர் நடத்துவதற்கான சாதி செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி சாய்பாபாவுக்கு 2017 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?

சிறிது காலத்திற்கு முன்பு சாய்பாபா எங்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “நான் மிகவும் பலவீனமாகவும், தொடர்ந்து முதுகு மற்றும் இடுப்பு வலி காரணமாகத் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறேன். முதல்முறை எனக்கு கொரோனா நோய்த்தொற்று  தாக்கிய போது அடைந்த பாதிப்புகளே இன்னமும் முழுமையாகக் குணமாகவில்லை என்று அவர் எழுதிருந்தார்.” “இந்நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதைச் சிறை நிர்வாகம் எங்களுக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை” என்று அவரது மனைவி வசந்தா கூறியுள்ளார்.

“இந்த சூழ்நிலையில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்றை எவ்வாறு அவர் தங்குவார் என்று நான் மிகவும் கவலைப்படுகிறேன். 90% உடல் ஊனமுற்ற நிலையில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வரும் அவரது நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைந்து அவர் மெல்ல மெல்ல இறந்து வருகிறார். ஆகவே அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நாக்பூர் சிறைத்துறையை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

2020 அக்டோபரில் சாய்பாபாவுக்கு புத்தகங்கள், உடைகள் மற்றும் மருந்துகளைச் சிறை நிர்வாகம் மறுத்ததாகக் கூறி, சிறையில் அவர்  உண்ணாவிரதம் இருந்திருந்தார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்