Aran Sei

8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தவருக்கு கொரோனா பரிசோதனை முடிவு – சுகாதாரத்துறை அழைப்பால் சர்ச்சை

தென்காசியைச் மாவட்டம் சுரண்டையை சேர்ந்த முன்னாள் காவல்துறை ஆய்வாளர் அந்தோணிராஜ் செப்டம்பர் மாதம் உயிரிழந்துள்ளார். அந்தோணிராஜின்  மகன் வினோத் தன்னுடைய மனைவி ஜென்சியுடன் சென்னை வசித்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஜென்சிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, வினோத்தின் செல்போனிற்கு குறுஞ்செய்தி அனுப்பட்டிருக்கிறது. இதனை வினோத் பொருட்பதாத நிலையில், ஏப்ரல் 19 ஆம் தேதி, வினோத்திற்கு தென்காசி சுகாதாரத்துறையிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.

அதில் வினோத்தின் தந்தை அந்தோனிராஜிற்கு கொரோனா நெகட்டிவ் என்றும், மனைவி ஜென்சிக்கு பாசிட்டிவ் என்றும் வந்திருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், உடனடியாக ஜென்சியை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட மருத்துவருக்கு கொரோனா – தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை

8 மாதம் முன் உயிரிழந்த அந்தோனிராஜிற்கும், 6 மாதமாக சென்னையில் இருக்கும் ஜென்சிக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி தென்காசி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது எப்படி என வினோத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறையினர், மருத்துவர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியோர் ஆகியோரை அணுகியதில், பதிலோ விளக்கமோ தெரிவிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source : Puthiyathalaimurai

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்