Aran Sei

கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை – தமிழக அரசு

கொரானா பெருந்தொற்று காரணமாகக் கடந்த மார்ச் மாதம் பொதுமுடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்து பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளோடு தளர்வுகளை வழங்கின. தீபாவளி பண்டிகை காரணமாகத் தனிமனித இடைவெளிகள் கடைபிடிக்கப் படாததாலும் அதிகமாகக் கூட்டம் சேர்வதாலும் இதுவரை 100 பேருக்கு மிகாமல் நடத்தப்படும் கூட்டங்களுக்கும் விழாக்களுக்கும் வழங்கி வந்த அனுமதியை அரசு திரும்பப் பெறுவதாகச் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் “சமூதாய, அரசியல், பொழுதுபோக்கு , கலாச்சார நிகழ்வுகள், மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் 16.11.2020 முதல் நடத்த அனுமத்திக்கப்பட்ட உத்தரவு தற்போது ரத்து செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா சூழலில் பண்டிகைகளை விட உயிர்களைக் காப்பது அவசியம்: உச்ச நீதிமன்றம்

முன்னதாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அனைத்து விதமான கல்வி நிறுவனங்கள், விடுதிகள் நவம்பர் 16 ஆம் தேதி முதல்  செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களின் நலன் குறித்து பெற்றோர் மற்றும்  ஆசிரியர் சங்கங்களிடம் கருத்துக் கேட்டறிந்ததாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள், கொரோனா காலத்தில் கல்வி நிறுவனங்களின் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது தமிக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் திறப்பிற்கு அனுமதி அளித்ததை திரும்பப் பெறுவதாகவும் பள்ளிகளின் திறப்பு தேதி சூழ்நிலைக்கேற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

’பள்ளிகள் திறப்பில் அவ்வளவு அவசரம் ஏன்?’-ஸ்டாலின் கேள்வி

அந்தச் செய்திக்குறிப்பில் “அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி, பல்கலைக்கழகங்களை  டிசம்பர் 2ஆம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது. இதர வகுப்பு ,மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது

“2.12.2020 அன்று திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும். கல்லூரி மற்றும் விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைப்பெற்று வரும் இணையவழி கல்விமுறை தொடர்ந்து நடைபெறும்” என்று செய்தி தமிழக அரசு வெளியிட்டள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்