Aran Sei

மீண்டும் ஊரடங்கிற்கு தயாராகிறதா தமிழகம் – ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள்குறித்து, இன்று (ஏப்ரல் 8), தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்கப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி தகவல்

“வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வர இ-பதிவு அவசியம். தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும்.” என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம் என்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.

மேலும், காய்கறி கடைகள், பல சரக்குக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய (நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்