Aran Sei

ஊழல் பிரச்சினையால் கொல்லப்பட்டாரா டெல்லி ராபியா? – புலன்விசாரணை கோரும் குடும்பத்தினர்

டந்த ஆகஸ்ட் 16 அன்று, ஃபரிதாபாத்தின் சுரஜ்குந்த்-பள்ளி பகுதியில்  குடிமை பாதுகாப்பு அதிகாரி ராபியா சைபியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடந்த உடல்கூராய்வில் எண்ணற்ற காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கொலைத் தொடர்பாக நிஜாமுதீன் என்பவர் டெல்லி கழிந்தி குன்ஜ் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

மேலும், அவர் ராபியாவை திருமணம் செய்திருந்ததாகவும் கூறியிருந்தார். ஆனால், ராபியாவின் குடும்பத்தினரும் வழக்கறிஞரும் இதனை மறுத்திருந்தனர்.

அதுமட்டுமின்றி, கொரோனா நடைமுறைகளை மீறியதற்காக விதிக்கப்படும் அபராதங்கள் தொடர்பாக நடந்த ஊழலின் காரணமாகவே அவர் கொல்லப்பட்டதாக  வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

மேலும், இதுதொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் ஃபரிதாபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளையில், ராபியாவின் கொலை தொடர்பாக அவரது  குடும்பம் மற்றும் வழக்கறிஞரின் குற்றச்சாட்டுத் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளை  தி வயர் செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டபோது அவர்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

Source:The wire  

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்