Aran Sei

சிங்கத்திற்கு கொரோனா தொற்று: வனவிலங்கு பூங்கா ஊழியர்களின் வழியாக பரவியிருக்கலாம் என சந்தேகம்

த்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள எட்டாவா வனவிலங்கு பூங்காவில் உள்ள ஒரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்றொரு சிங்கத்திற்கு தொற்று ஏற்படலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் டாக்டர் கேபி சிங், “எட்டாவா வனவிலங்கு பூங்காவில் உள்ள 14 ஆசிய சிங்கங்களின் மாதிரிகள் கொரோனா தொற்று சோதனையான ஆர்டி-பிசிஆர் சோதனைக்காக இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அவற்றில், ஒரு சிங்கத்திற்கு தொற்று உறுதியாகியுள்ளது. மற்றொரு சிங்கத்திற்கு தொற்று ஏற்படலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மீதமுள்ள 12 சிங்கங்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 143% அதிகரிப்பு – ஸ்டடீஸ்டா நிறுவனம் அறிக்கை

வனவிலங்கு பூங்கா ஊழியர்களின் வழியாக சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் எட்டு ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்