Aran Sei

கொரோனா நோயாளிகள் தரையில் படுக்கும் அவல நிலை – தமிழகத்திலும் தொடங்குகிறதா அசாதாரண நிலை?நிலை

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்  கீழே படுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகினறன.

இந்தியா முழுவதும் கொரோனா இரணடாவது அலை பரவி வருகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, தடுப்புமருந்துகள் தட்டுபாடுகள் இருப்பதாக மாநில அரசுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா இரண்டாவது அலை பரவலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எண்ணிக்கையை குறைத்து காட்டும் நிர்வாகம்

வட இந்தியாவில் பினம் எரிக்க இடம் இல்லாமல் மக்கள் தவிப்பதாக செய்திகள் வருகின்றன. அதிகமான மரணங்கள் நிகழ்வதாகவும், ஆனால் நிர்வாகம் குறைத்து கணக்குச் சொல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில்,    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்  கீழே படுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், அதே அருத்துவமனையில் பணிபுரியும் 2 மருத்துவர்கள்  4 செவிலியர்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கைன்றன.

 

Source: Sun News

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்