Aran Sei

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பைக் கண்காணிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

கொரனோ காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரனோ சிகிச்சையில் தீவிர பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பட்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – சுடுகாடுகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்சுகள்

இந்நிலையில், போதிய அளவில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தி செய்யப்பட வேண்டும் எனவும், கைஇருப்பில் வைத்திருப்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்தப் வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசுகள் கட்டுப்பாடு மையங்கள் அமைத்து மாவட்டந்தோறும் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

”கொரோனா இரண்டாம் அலை உருவாக பொதுமக்களே காரணம்” : சமூக வலைதளங்களில் விமர்சனமான சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்து

மருத்துவ ஆக்ஸிஜனின் அதிகபட்ச நுகர்வு மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகமாக  பயன்பட்டு வருகிறது.

மேலும், ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கிடைக்க பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆர்கான் மற்றும் நைட்ரஜன் சிலிண்டர்களை ஆக்சிஜன் சிலிண்டர்களாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது.

source: the indian express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்