Aran Sei

இந்தியாவில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா தொற்று – தமிழகத்தில் ஒருவருக்கு பாதிப்பு

credits : the indian express

இங்கிலாந்தில், கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் விஞ்ஞானிகள், உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதைக் கண்டுபிடித்தனர்.

இங்கிலாந்தின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்காக், புதிய வகை கொரோனா நோய்த்தொற்று, அதிவேகத்தில் பரவி வருவதால் தடுப்புமருந்து கண்டுபிடிக்கும் வரை இங்கிலாந்தின் பல பகுதிகளில் நான்காம் கட்ட (Tier-4) பொதுமுடக்கம் அமல் படுத்துவதாக அறிவித்தார். தடுப்புமருந்து வரும் வரை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது மிக கடினம் என மேட் ஹேன்காக் கூறினார்.

இதையடுத்து அதிவேகமாகப் பரவி வரும் ”இந்தப் புதிய வகை கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அச்சமூட்டுவதாக இருக்கிறது. இந்த நிலைமை மோசமான பின்பே சரியாகும். எனவே, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை நோய்த்தொற்றைப் பரவ விடாமல் கட்டுக்குள் வைக்க வேண்டும்” என இங்கிலாந்தின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்காக் தன் ட்விட்டர் பக்கத்தில் இங்கிலாந்து மக்களிடம் வேண்டுகோளை முன் வைத்தார்.

பரவும் புதிய வகை கொரோனா – தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

புதிய வகை கொரோனா நோய்த்தொற்று குறித்து இந்திய அரசு விழிப்போடு இருப்பதாகவும், இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியிருந்தார்.

கொரோனா தடுப்பு மருந்து சோதிக்கப்பட்டவருக்கு மனநலம் பாதிப்பு

இதையடுத்து, லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகள் சிலருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய மாதிரிகள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பபட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்ததது.

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவும் புதியவகை கொரோனா – நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்

இந்நிலையில், பரிசோதனைக்கு அனுப்பபட்ட மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு, புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ”இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. புதிய வகை தொற்று, கொரோனா தொற்றா என்பதை கண்டறிய அவர்களின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : பரவ தொடங்கிய புதிய வகை கொரோனா

புதிய வகை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 120 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

’கொரோனா வருவதற்கு சாத்தியமுள்ள வேலைகளில் ஈடுபட வேண்டாம்’ – ரஜினிக்கு அப்போலோ அறிவுறுத்தல்

இந்நிலையில், இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்