கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் குஜராத் மாநிலத்தில் உள்ள மசூதியொன்றை அம்மசூதி நிர்வாகம் மக்கள் பயன்பாட்டுக்காக கொரோனா வார்டாக மாற்றி அமைத்துள்ளது.
கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் அறிவிப்பு
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் மருத்துவ வசதிகள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் குஜராத் மாநிலம், வடோர பகுதியில் உள்ள ஜஹாங்கிர்ப்புரா மசூதியை 50 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாற்றி அந்த மசூதி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Gujarat: Amid a surge in COVID cases, Vadodara's Jahangirpura Masjid converted into a 50-bed COVID facility
"Due to oxygen & beds shortage, we decided to convert it into COVID facility. And what's better than the month of Ramadan to do it," says mosque trustee (19.06) pic.twitter.com/MRqxAN1WBm
— ANI (@ANI) April 20, 2021
இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த மசூதி நிர்வாகி இர்பான் ஷேக், கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே மசூதியைக் கொரோனா வார்டாக மாற்றியுள்ளோம். ரமலான் மாதத்தில் இதைவிட வேறென்ன சிறப்பாகச் செய்து விட முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜஹாங்கிர்ப்புரா மசூதி 50 படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டாக மாறியுள்ளது.
SOURCE; ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.