கொரனோ தொற்று அதிவேகமாகப் பரவும் சூழலில் கும்பமேளாவில் இருப்பதுபோல் நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பாகிஸ்தான் மோதல் அதிகரித்துள்ளது – அமெரிக்கா
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவீட்டர் பதிவில், “கும்பமேளாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இரண்டு புனித நீராடல்களும் அதே இடத்தில் நடக்க வேண்டுமென பிராத்திக்கிறேன். ஆனால் கொரனோ தொற்றின் அதிவேகமாகப் பரவல் காரணமாக கும்பமேளாவில் இருப்பதுபோல் நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். அப்போதுதான்கொரனோ தொற்றுக்கு எதிரான நமது போராட்டம் வலுபெறும்” என்று பதிவிட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் பகுதியில் நடந்துவரும் கும்பமேளாவில் கொரனோ நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநில அரசு கும்பமேளாவிலிருந்து திரும்புவர்களுக்கு கொரனோ பரிசோதனை கட்டாயம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.