Aran Sei

கொரோனா பரவலால் ‘சார் தாம்’ புனித யாத்திரைக்கு தடை – உத்தரகண்ட் முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும்நிலையில் ‘சார் தாம்’ புனித யாத்திரைக்கு தடைவிதித்து உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவந் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் சார் தாம் யாத்திரையை நடத்துவது சாத்தியமில்லை என்று அறிவித்துள்ளார்.

” சார் தாம் யாத்திரையை இன்னொரு கும்பமேளாவாக அனுமதிக்க முடியாது ” – உத்தரகாண்ட் நீதிமன்றம் கண்டிப்பு

மேலும், பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய நான்கு கோவில்களில் உள்ள துறவிகள் மட்டுமே சார் தாம் யாத்திரைக்கான புனித சடங்குகள் மற்றும் பூஜையில் ஈடுபடுவார்கள் என்றும் உத்தரகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்று மட்டும் 6,054 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை அங்கு 1,68,616 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

source; the indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்