Aran Sei

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் இல்லையா?: விவசாய சங்கத்தினர் கேள்வி

ஹரியானாவில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக கூறி ஹரியானாவைச் சேர்ந்த 19 காப் (சாதி) பஞ்சாயத்துகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி, கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில், அரசைக் கண்டித்து ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 19 காப் பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

’ஏப்ரல் 21 அன்று விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் டெல்லி நோக்கி பேரணி’ – விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி, ஜிந்த் மற்றும் பாட்டியாலாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு காப் பஞ்சாயத்து தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான போராட்டம் எனவும், இந்த மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘விவசயிகளிடையே வன்முறையைத் தூண்டும் பாஜக’ – விவசாயிகள் சங்கத்தலைவர்கள் குற்றச்சாட்டு

”பாஜக தலைவர்கள் தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது, மற்ற நிகழ்வுகளை மட்டும் கொரோனா தொற்றுடன் இணைத்து பேசுவது ஏன்?” என விவசாயிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

‘கொரோனா பாதுகாப்பில் பாஜகவின் போலித்தனங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன’ – விவசாயிகள் சங்க தலைவர் கருத்து

இந்தச் சூழலில் பாரதிய கிசான் சங்கத்தின் ஹரியானா தலைவர் குர்னம் சிங் சாதுனி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கொரோனா பாஜகவின் இடைத்தரகர். மக்களிடம் அச்சத்தை விதைத்து, அரசாங்கம் இந்த நாட்டை விற்கப் பார்க்கிறது. விவசாய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

” ஷாஹீன் பாக் போராட்டத்தை கலைத்தது போல விவசாயிகள் போராட்டத்தை கலைக்க நினைக்க வேண்டாம் ” – ராகேஷ் திகாயத்

மேலும், ”கொரோனா தொற்று என்ற பெயரால், அரசாங்கம் இந்த மக்கள் இயக்கத்தை நசுக்கப் பார்க்கிறது. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இந்தத் தொற்று எங்கு உள்ளது ? அங்கு பாஜக பெரும் திரளான மக்களைக் கூட்டி பொதுக் கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்துகின்றது, அந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொள்கின்றனர்” என்றும் அவர் ட்விட் செய்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் – கட்சியிலிருந்து இருந்து விலகிய உத்தரபிரதேச பாஜகவின் பெண் தலைவர்

விவசாயிகளின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ், அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்,  ” பெருந்தொற்றுக் காலத்தில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிடுத்து, போராட்டக் களத்திற்கு பின்னர் வரலாம்” என்று மட்டுமே கூறியதாக தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்