Aran Sei

கொரோனா ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி தகவல்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும்,அவர்களின் சேமிப்பும் கடுமையாகச் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

2020-21 ஆம் நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நாட்டு மக்களின் கடன் சுமை 37.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

பீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்

மேலும்  ,வீடுகளில் சேமிக்கும் அளவு ஜிடிபி-யில் 10.4 சதவீத அளவுக்குச் சரிந்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் பல லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர் , சில நிறுவனங்களில் ஊதியக் குறைப்பும் நிகழ்ந்துள்ளது.

இதனால் செலவுகளை ஈடுகட்ட பலர் கடன் வாங்கியுள்ளனர். சிலர் சேமிப்புகளைக் குறைத்து செலவுகளைச் சமாளித்துள்ளனர். நடப்பு நிதி ஆண்டின் (2020-21) முதல் காலாண்டில் ஜிடிபி-யில் 21 சதவீதமாக இருந்த வீடுகளின் சேமிப்பு அளவு, இரண்டாம் காலாண்டில் 10.4 சதவீதமாகச் சரிந்துள்ளதாகவும்  என ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘கடுமையாக உழைப்பதால் பாஜகவினருக்கு கொரோனா வராது’ – பாஜக எம்எல்ஏ

2019-20 நிதி ஆண்டின் முதல் காலாண்டிலிருந்தே குடிமக்களின் கடன் வாங்கும் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளது. இது 2020-21 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 37.1 சதவீத அளவு அதிகரித்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் கடன் வழங்கும் அளவு இரண்டாம் காலாண்டில் 20 புள்ளிகள் அதிகரித்து ரூ.102.7 லட்சம் கோடியாக உள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தற்போது கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளதால் வீடுகளின் சேமிப்பு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்