Aran Sei

கொரோனா நெருக்கடி காலத்தில் 3408 கோடிக்கு நாடாளுமன்றம் தேவையா? – ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கண்டனம்

கொரோனா நெருக்கடி காலத்தில் மருத்துவ வசதிகள் பற்றாக்குறை நிலவும்போது 3408 கோடிக்கு நாடாளுமன்றம் கட்டுவதற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமா என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் அலட்சியமே உயிரிழப்பு ஏற்பட காரணம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 3408 கோடி ரூபாய்க்கு நாடளுமன்றம் கட்டப்படுவது குறித்த மத்திய அரசின் நிலைப்பாடுகுறித்த படத்தைப் பதிவிட்டு “கொரோனா நெருக்கடி நிலை நிலவுகிறது /பரிசோதனைகள் இல்லை/ தடுப்பூசி இல்லை/ஆக்ஸிஜன் இல்லை/ தீவிர சிகிச்சை பிரிவு இல்லை/ஆனால் எதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது!” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதற்கு வேண்டுமானால் கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம். ஆனால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஐ.சி.யு படுக்கைகள் பற்றாக்குறை காரணமாகவே பலர் உயிரிழந்து வருகின்றனர். மத்திய அரசே இது உங்களால்தான் ஏற்பட்டது” என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்