Aran Sei

கதை திருட்டு விவகாரம் – கங்கனா ரணாவத் மீது வழக்குப் பதிவு

காப்புரிமை பெறாமல் கதையைத் திருடித் திரைப்படம் அறிவித்த குற்றத்தின் பேரில் கங்கனா ரணாவத் உட்பட நால்வர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை மாநிலம், கஹர் காவல் நிலையத்தில் எழுத்தாளரிடம் அனுமதி பெறாமல் அவரது கதையைத் திரைப்படமாக அறிவித்த குற்றத்தின் பேரில் நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரி ரங்கோலி சந்தால்,  சகோதரர் அக்ஷத் ரணாவத் மற்றும் கமல் குமார் ஆகியோரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காப்புரிமை வேண்டாம்; மக்களைக் காப்பாற்றினால் போதும்

தீதா என்கிற காஷ்மீர் அரசியை பற்றிய அந்தப் புத்தகத்தை எழுதிய ஆஷிஷ் கௌல் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஆஷிஷ் கௌல், தான் முன்னமே மின்னஞ்சல் வழியாக கங்கனாவை தொடர்பு கொண்டேன் என்று தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

மின்னஞ்சல் வழியே கதையின் சில பகுதிகளை அனுப்பியதாகவும் ஆனால் சில நாட்களுக்கு முன் அனுமதியின்றி கங்கனா படத்தை அறிவித்தபோது அவர் அதிர்ச்சியடைந்ததாகவும்  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்புகளுக்கான பெருமையில் பங்கு கொடுக்காத எடிசன் – 1093 காப்புரிமைகள் பதிவு செய்தவர்

இந்த வழக்குகுறித்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரணாவத்” கௌலின் கதையை மையப்படுத்தி இந்தத் திரைப்படம் இல்லை ” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.

இந்நிலையில் கீழமை நீதிமன்றத்தில் கங்கனா மீது இந்தியா தண்டனை சட்டம் 156(3) பிரிவின் கீழ் வழக்குப்பதியவேண்டுமென மனுவொன்றை ஆஷிஷ் கௌல் பாந்த்ரா தாக்கல் செய்தார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவில் வழக்கு பதிய கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதின் அடிப்படையில் கஹர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எக்ஸ்ரே கண்டுபிடித்த ராண்ட்ஜென் – நோபல் தொகையை ஆய்வுக்கு அர்ப்பணித்த, காப்புரிமையை எதிர்த்த மக்கள் விஞ்ஞானி

இந்நிலையில் கஹர் காவல்நிலையத்தில் 406,415,418,120 பி மற்றும் காப்புரிமை சட்டத்தின் கீழும் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கதை திருட்டு குறித்து ஆஷிஷ் கௌல் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், இதுகுறித்து கங்கனா பதிலளிக்காத நிலையில் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்