Aran Sei

கூச் பஹர் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூடு – விசாரணையைத் தொடங்கியது மேற்கு வங்க சிஐடி

மேற்கு வங்க மாநிலம் கூச் பஹர் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக அம்மாநில குற்றவியல் புலனாய்வு துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அப்போது கூச் பஹர் மாவட்டத்திற்கு உட்பட்ட சிதல்குச்சி வாக்குச்சாவடியில் ஏற்பட்ட மோதலைத் தடுக்க மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

சிஐடி காவல்துறையினர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொள்ள உள்ளது.

வாக்குப் பதிவின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு – விசாரணை நடத்தப்படும் என மம்தா அறிவிப்பு

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை இனப்படுகொலை என விமர்சித்துள்ள மம்தா, வாக்குப்பதிவு மேற்கொள்ள வரிசையில் நின்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சாட்சியங்களையும் அவர்களது ஆதாரங்களையும் பதிவு செய்வதற்கு முன்னர், சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வலம் வரும் தகவல்கள் குறித்து எஸ்ஐடி ஆராயவுள்ளது என அதிக்காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் நடைபெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடமும் எஸ்ஐடி விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்