Aran Sei

குஜராத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: பாஜக தலைவருக்கு எப்படி கிடைத்தது 5000 தடுப்பூசிகள்? – காங்கிரஸ் கேள்வி

குஜராத் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், சூரத் நகரில் 5 ஆயிரம் பேருக்கு ரெம்தேசிவிர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டில் கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

கொரோனா அதிகம் பாதித்த சூரத் நகரில் தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பாட்டில் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

தடுப்பூசிக்கு  தட்டுப்பாடு நிலவி வருவதால், சூரத் நகருக்கு சிறப்பு ஏற்பாடுகளால் 10 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்தார். அப்போது பாட்டிலுக்கு எப்படி 5 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைத்தது என்று எழுப்பட்ட கேள்விக்கு, “அதை அவரிடம் கேளுங்கள்”  என ரூபானி பதிலளித்திருந்தார்.

கொரோனோ இரண்டாம் அலைப்பரவலிலும் மதுக்கடைகள் மூடப்படாதது ஏன்? -மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், பாஜக தலைவருக்கு 5 ஆயிரம் தடுப்பூசிகள் எப்படி கிடைத்தது  குறித்து மாநில அரசு விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா தெரிவித்துள்ளார்.

முன்னதாக குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, மாநில அரசு சார்பாக 3 லட்சம் ரெம்தேசிவிர் தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்