Aran Sei

கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் அத்துமீறல் புகார்கள் – கல்லூரி பேராசிரியர் கைது

ல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆங்கிலத்துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராக பணிபுரியும்  C. தமிழ் செல்வன் என்பவர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்து வருவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தனது அதிகாரத்தையும் ஆசிரியர் எனும் பதவியையும் துஷ்பிரயோகம் செய்து, வாய்மொழியாகவும், வாட்சாப் (WhatsApp) உரையாடல்கள் வழியாகவும், உடல் ரீதியாகவும் தனது இச்சைக்கு மாணவிகளை இலக்காக்கி அச்சுறுத்தி வந்ததாக மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பலரும் இவரால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் சக மாணவர்களிடம் தெரிவித்ததை அறிந்து அந்த மாணவர்களையும் தனிப்பட்ட முறையில் அழைத்து பேசியுள்ளார். அவர்கள் வெளியில் சொல்லும் பட்சத்தில் அவர்கள் படிப்பை தொடர்வதில் சிக்கல் உண்டு பண்ணுவேன் என்றும் கல்லூரிக்கு அப்பாற்பட்டு வன்முறையான தாக்குதல்களும் செய்வேன் என்றும் பேராசிரிய மிரட்டியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Student’S Protest

எனவே, நிர்வாகம் இது குறித்து உடனே தீவிர விசாரணை செய்து, பணி ரீதியாக மட்டுமல்லாது, அவர் இனி எந்த ஒரு கல்லூரியிலும் பணியாற்ற முடியாதபடி சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென்று கோரி தக்க ஆதாரங்களோடு புகார் அளித்து, ஆங்கிலத் துறை மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார். பணி நீக்கம் செய்ததாக மாணவர்களிடம் கூறிய நிர்வாகம் இன்று(டிசம்பர் 1) காலை அதே ஆசிரியரைக் கொண்டு ஆன்லைன் வகுப்பு நடத்தியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் புகாரும், குற்றச்சாட்டும் புறக்கணிக்கப்பட்டதை/அலட்சியப்படுத்தப்பட்டதை ஆங்கிலத்துறை மாணவர்களுக்கு ஆதரவாக பிற துறை மாணவர்களும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி வேண்டி சாலையில் போராடி வருகிறார்கள். இந்திய மாணவர் சங்கம் மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் போராடி வருகிறது.

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் C. தமிழ் செல்வனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்