Aran Sei

சமூகச் செயற்பாட்டாளர் ஹரிஷ் மந்தர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – சமூகச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் கண்டனம்

னித உரிமைகள் செயல்பாட்டாளர் ஹரிஷ் மந்தர் வீடு, அலுவலகம் மற்றும் அவர் நடத்திவரும் குழந்தைகள் காப்பகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதற்கு, 500 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், செயல்பாட்டார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

”அமைதி மற்றும் நல்லொழுக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் செயல்பட்டு வரும் முன்னணி மனித உரிமைகள் செயல்பாட்டாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். தவறேதும் செய்யாத ஒருவர் மீது தொடர்ந்து சோதனை செய்வதன் மூலம் தொடர்ச்சியான துன்புறுத்தல் செய்யப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மந்தரின் வீடு, அவர் நடத்தி வரும் கல்வி மையத்தின் அலுவலகம், குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றில், வியாழக்கிழமை (செப்டம்பர் 16) அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

ஒன்றிய அரசு ஹரிஷ் மந்தரை குறிவைத்து தொடர்ச்சியாக துன்புறுத்தி வருகிறது என செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

”கடந்த சில ஆண்டுகளாகவே ஹரிஷ் மந்தர் மற்றும் அவரது ஈக்விட்டி ஸ்டடிஸ் செண்டர் கல்வி மையம் (சி.இ.எஸ்) ஒன்றிய அரசின் பல்வேறு முகமைகளால் சோதனைக்குள்ளாகியுள்ளது. சி.இ.எஸ்ஸிற்கு எதிராக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) முன்வைத்த தவறான மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளை டெல்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (டிசிபிசிஆர்) எதிர்கொண்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து குற்றச்சாட்டுகளை முற்றிப்புள்ளி வைத்தது.” என அவர் தெரிவித்துள்ளனர்.

”பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் வருமான வரித்துறையினரின் தொடர் துன்புறுத்தலுக்கு சிஇஎஸ் உள்ளானது. அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் பண மோசடியோ அல்லது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையோ செய்யப்பட்டதாக நிருபிக்கப்படவில்லை. அரசின் எதிராக கருத்து தெரிவிப்பவர்களை அச்சுறுத்தும் விதமாக அரசின் முகமைகள் பயன்படுத்தபடுகிறது” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒன்பது மாத நிதிநல்கை திட்டத்திற்காக செப்டம்பர் 15 ஆம் தேதி  இரவு ஹரிஷ் மந்தர் மற்றும் அவரது மனைவி ஜெர்மனி புறப்பட்டுச் சென்ற நிலையில், செப்டம்பர் 16 ஆம் தேதி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்