ஒரே இடத்தில் இருந்தும் கணவருக்குத் தெரியாமலே சிறை அதிகாரிகள் கையொப்பமிட்டதால் நடந்து முடிந்த செயல்பாட்டாளரின் கடைசி அறுவை சிகிச்சை.
கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி திடீரென மூளை அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, 2014ல் நக்சல்பாரி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட முப்பத்தெட்டு வயதான காஞ்சன் நானாவேர் மற்றும் அவரது கணவர் அருண் பெல்கே ஆகிய இருவரும் எர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் நானாவேர் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் உள்ள அதே வளாகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த பெல்கேக்கு அறுவை சிகிச்சை குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. அவரது சம்மதமும் பெறப்படவில்லை. சிறை கண்காணிப்பாளர், ” சம்மதம் தெரிவிக்க உறவினர்கள் யாரும் அருகில் இல்லை, ” என்று கூறி அறுவை சிகிச்சை ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந்த அறுவை சிகிச்சை மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுத்து, நானாவேருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது. இதுவும் பெல்கேக்கு தெரிவிக்கப்படவில்லை. இறுதியாக, ஒரு சில சக கைதிகள் அவரது மோசமான நிலையை அறிந்ததும், அவர்கள் பெல்கேக்கு தகவலை தெரிவித்தனர். அவர் இதை ஜனவரி 18 ஆம் நாள் அறிந்து. ஆனால் நானாவேரை சந்திக்க அவர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்ததுள்ளார். நீதிமன்ற நடைமுறைகளில் மேலும் ஐந்து நாட்கள் கழிந்தன. ஜனவரி 23 அன்று, அவர் இறுதியாக நானாவேரை புனேவில் உள்ள சாசூன் மருத்துவமனையில் பார்க்க வந்தார். அவரை அடையாளம் கண்டுகொள்ளவோ, பேசவோ முடியாத நிலையில் நானாவேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். ஒரு நாள் கழித்து, அவர் இறந்தார்.
தீவிர மருத்துவ நிலை
பிறவியிலேயே இதய நோயுடன் பிறந்த நானாவேர், 2014 இல் பெல்கேவுடன் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஏற்கனவே 1996 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இரண்டு இதய அறுவை சிகிச்சைக்கு(open heart surgery) உட்படுத்தப்பட்டார். மேலும் அவரது தீவிர மருத்துவ நிலை சிறைத்துறை (அரசு அதிகாரிகள்), நீதித்துறை ஆகிய இரு தரப்பிற்கும் தெரியும்.
2014 முதல் 2021 வரை, நானாவேர், பல சந்தர்ப்பங்களில், மூச்சுத் திணறல், ஆர்த்தோப்னியா (தட்டையாக படுக்கும்போது மூச்சுத் திணறல்), கால்கள் வீங்குதல் மற்றும் அதிக இரத்தப்போக்கு போன்ற கடுமையான நோய்களால் அவதிப்பட்டு வந்தார். 2020 வாக்கில், அவரது உடல் செயல்பாட்டுத் திறன் 40% ஆக குறைந்துள்ளது. அவருக்கு கடுமையான உடலில் திரவங்கள் சேகரிக்கும் நிலை (எடிமா) இருந்தது இது அவரை அசைவற்றவராக மாற்றி இருந்தது. 2020 ஆம் ஆண்டில், நீண்ட காலமாக மருத்துவமனையில் தங்கியிருந்த பிறகு, ஒரு அதி சிறப்பு மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் உடல்நிலை மேலும் மோசமாகப் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். ஆனால் சிறை அதிகாரிகள் இந்தப் பரிந்துரையை புறக்கணித்துடன், அவருக்கு மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதியை ஏற்படுத்தவோ அல்லது மேல் சிகிச்சைக்காக அதி சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர்கள்: ஐபிசிசி அறிக்கை விடுக்கும் எச்சரிக்கைகள் என்னென்ன?
இந்த தெளிவான, உயிருக்கு ஆபத்தான சவால்கள் அவருக்கு பிணை பெறவும் உதவவில்லை. அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை அணுகி பிணை கோரி வலியுறுத்திய நிலையில், நீதிமன்றம் அவரது மனுவை பலமுறை நிராகரித்தது.மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர் நானாவேர். பெல்கே ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
உரிய செயல்முறை
அவள் இறந்த உடனேயே, சிறை அதிகாரிகள் ஏற்கனவே உள்ள மருத்துவ நோய்களின் விளைவாக அவர் இறந்ததாக காட்ட முயன்றனர். ஆனால் ஒரு வருடம் கழித்து, பெல்கே, அவரது வழக்கறிஞர்கள் மூலம், சிறை அதிகாரிகள் உண்மையில், அவருக்குத் தெரியாமல் ஒப்புதல் ஆவணங்களில் பொய்யாக கையெழுத்திட்டு வைத்திருந்ததைக் கண்டுபிடித்தார்.நானாவேரின் மரணம் குறித்து விரிவான விசாரணை கோரியும், அவரது மரணத்திற்கு காரணமான, அவரது அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவ மற்றும் சிறை அதிகாரிகளின் ஆய்வு மற்றும் அவரது அனைத்து மருத்துவ ஆவணங்களையும் தரக் கோரியும் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் பெல்கே ஒரு கிரிமினல் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். நீதிபதி பிரசன்னா வரலே மற்றும் சுரேந்திர தவாடே ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம், கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்து, கூடுதல் காவல்துறை இயக்குநர் (சிறைகள்) மற்றும் எர்வாடா மத்திய சிறையின் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
பெல்கே சார்பில் மூத்த வழக்கறிஞர் காயத்ரி சிங் வாதாடினார்.அவரது மரணத்திற்குப் பிறகு, மாநில அதிகாரிகள், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 176 (1A) இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டபடி நீதி விசாரணை நடத்துமாறு புனே நீதிமன்றத்தின் தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் வியப்பிற்குரிய வகையில், நானாவேர், பெல்கே அல்லது அவரது உறவினர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் உட்பட யாரும் இதுவரை பரிசோதனைக்கு அழைக்கப்படவில்லை. பெல்கே தனது மனுவில், அரசு தொடங்கியதாகக் கூறும் நீதி விசாரணை தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைத் தருமாறு கோரியுள்ளார். நீதி விசாரணையுடன், பெல்கே தனது மனுவில், தீவிர நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும், அலட்சியமாக இருந்ததற்காக ரூ.50 லட்சம் இழப்பீடும் கோரியுள்ளார்.
காவல்துறை மற்றும் நீதிமன்றக் காவலில் மரணமடையும் குடிமக்களின் வழக்குகளில் உண்மையை வெளிக் கொண்டுவருவதற்கான ஒரே வழியாகக் கருதப்படும் நீதி விசாரணைகள், சட்டப்பூர்வமாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மூலமாகவும் பல சந்தர்ப்பங்களில் கட்டாயமாகின்றன. ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் இந்த கட்டாய நடைமுறையை முற்றிலுமாக புறக்கணித்து விடுகின்றன. ஒருவேளை அவற்றை பின்பற்றினாலும் அவை பெரும்பாலும் காகிதங்களில் மட்டுமே உள்ளன.நானாவேர் புனே சிறையில் கழித்த அந்த ஆறு ஆண்டுகளில், அவர் ஒன்பது வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டார். அவற்றுள் ஆறு வழக்குகளில் அவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தார் . கட்சிரோலி, புனே மற்றும் கோண்டியாவில் தலா ஒரு வழக்கு அவர் இறக்கும் போதும் நிலுவையில் இருந்தது. முன்பு குறிப்பிட்டது போல் – நானாவேர் மீது ஒரு குற்றச்சாட்டின் கீழும் தண்டனை விதிக்கப்படவில்லை. நீதிமன்றத்தால் பலமுறை பிணை மறுக்கப்பட்டது. இந்த தாமதம் அவருக்கு ஏற்கனவே இருந்த கடுமையான நோய் மோசமடைய வழிவகுத்தது. ஒரு விசாரணைக் கைதியாக இருந்த பெல்கே, ஒரு தண்டனையும் இல்லாமல் ஏழு வருடங்களை சிறையில் கழித்துள்ளார்.
உயர் நீதிமன்றமும் கண்மூடி கிடந்தது
அவரது வழக்கறிஞரான பார்த் ஷா, சிறை அதிகாரிகள் நானாவேரை அவரது கணவர் அணுகுவதைத் தடுத்து, அவர் சார்பாக முடிவுகளை எடுத்ததாக கூறுகிறார். மருத்துவ காரணங்களுக்காக முன்வைக்கப்பட்ட பிணை மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருந்தபோதும் இது நடந்ததாக ஷா கூறுகிறார். உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி, அவரது நாள்பட்ட இதய நோய், அவரது மற்ற உறுப்புக்களை பலவீனமடையச் செய்யும் என்று முடிவில் தெரிவித்திருந்தது, மருத்துவ ஆலோசனையின்படி இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இல்லாதது, இறுதியில் அவரது கல்லீரலையும் பாதித்தது. செப்டம்பர் 25, 2020 அன்று உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஷா சுட்டிக் காட்டுகிறார், நானாவேரின் வழக்கு கைதிகளின் நோய் குறித்து சிறை அதிகாரிகளின் “அடக்கமற்ற” அணுகுமுறையை பதிவு செய்தது. இந்த அறுவை சிகிச்சையைத் தொடர சிறை அதிகாரிகள் முடிவு செய்த போது, இந்த உயர் நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தது. நீதிமன்றமும், எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிந்திருக்கவில்லை என்று ஷா சுட்டிக்காட்டினார். “அந்த நேரத்தில் அவரது பிணை மனு மீதான விசாரணைகள் நடந்து கொண்டிருந்தாலும், இந்த முன்னேற்றங்கள் எதுவும் பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படவில்லை” என்று ஷா கூறுகிறார்.நானாவேர் மற்றும் பெல்கே இருவரும் மாணவர் ஆர்வலர்கள். அவரது உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், 2004 முதல் அவர் கைது செய்யப்படும் வரை நானாவேர் மக்கள் இயக்கங்களில் தீவிரமாக இருந்தார். விவசாயிகள், தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட கூர்மையான குரல்களில் இவரும் ஒருவர் என்பதை அவரது நண்பர்கள் மற்றும் இயக்கத்தில் உள்ள சக ஊழியர்கள் நினைவு கூர்கின்றனர்.நானாவேரின் மரணத்திற்குப் பிறகு, பெல்கே மீண்டும் தனது இறுதிச் சடங்குகளில் கலந்துக் கொள்ள நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. தனது மனைவியும், கூட்டாளியுமான நானாவேரின் மரணத்திற்குப் பிறகு பெரும் துன்பத்திற்கு உள்ளான பெல்கே தனது உணர்வுகளை ஒரு கடிதத்தில் வெளிப்படுத்த முயன்றார்
“மெயின் ஹுமாரி கஹானி லிக்னே கி கோஷிஷ் கர்தா ஹூன், பிர் ருக் ஜாதா ஹூன். ஃபிர் கோஷிஷ் கர்தா ஹூன், ஃபிர் ருக் ஜாதா ஹூன் (‘நான் எங்கள் கதையை எழுத முயற்சிக்கிறேன், பின்னர் நான் நிறுத்துகிறேன். நான் மீண்டும் முயற்சிக்கிறேன், பின்னர் மீண்டும் நிறுத்துகிறேன்’)” என்று அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் கடிதத்தில் எழுதுகிறார்.ஜனவரி 24 அன்று, நானாவேர் இறுதி மூச்சு விட்டபோது, சிறை வளாகத்தில் ஒரு நைட்டிங்கேல் பாடுவதைக் கேட்டதாக பெல்கே எழுதுகிறார்.“…
ஜப் கோயல் ஹி ஆவாஸ் கான்பர் பதி,
அவுர் மைனே ஜோரோ சே கோயல் கஹ்கர்
பிரதிசாத் தியா
சில நிமிடங்களுக்குப் பிறகு, நானாவேரின் மரணம் பற்றி அவரிடம் கூறப்பட்டது.“
காஞ்சன் ஆக்ரி சமய், கோயல் கி காந்த் சே
முஜே ஆவாஸ் தி
அவுர் போலி,மேரி தோஸ்த்,
மேரி ராஜா,
மேரி காம்ரேட்,
மெயின் ஜராஹி ஹூன்,
ஷாஹிடோன் கே க்ஷேத்ரா மெயின்…
தூ அப்னா அவுர் அப்னே லோகன் கா காயல் ரக்னா
அப்னே ஆதர்ஷோன் கே லியே லட்டே ரெஹ்னா…”
(‘காஞ்சன் தன் கடைசி மூச்சில்
ஒரு நைட்டிங்கேல் மூலம் என்னிடம் பேசினாள்.
அவள் சொன்னாள்,
என் அன்பே,
என் நண்பனே,
என் தோழனே,
நான் கிளம்புகிறேன்…
மற்ற தியாகிகளுடன் சேரப் போகிறேன்.
உங்களையும் உங்கள் மக்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கொள்கைகளுக்காக தொடர்ந்து போராடுங்கள்.’)
சுகன்யா சாந்தா
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.