Aran Sei

குணால் கம்ரா, ரச்சிதா தனேஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

கைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, கார்ட்டூனிஸ்ட் ரச்சிதா ஆகியோருக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

குணால் கம்ரா, “உச்ச நீதிமன்றம் தான் இந்நாட்டின் உச்ச நகைச்சுவை”, “முதுகெலும்புள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிபதிகளை ‘மரியாதைக்குரிய’ என்றழைப்பதை நிறுத்த வேண்டும். மரியாதை அந்த வளாகத்தை விட்டு சென்று பல காலம் ஆகிவிட்டது” என சில மாதங்களுக்கு முன் பதிவு செய்த ட்வீட்களால், சில வாரங்கள் முன், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு புகார் வைக்கப்பட்டது.

அர்னாப் ஜாமீன் வழக்கு – விமர்சனம் செய்த குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

“பாஜக என்னுடைய அப்பா” என அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தை மிரட்டுவது போன்ற கார்ட்டூன் மற்றும் உச்ச நீதிமன்றத்தை ‘சங்கி நீதிமன்றம்’ என்று கூறி, மூவர்ண கொடிக்கு பதிலாக காவிக் கொடியை வரைந்திருக்கும் கார்ட்டூன் மற்றும் உச்ச நீதிமன்றத்தை விமர்சிக்கும் வகையில் இருக்கும் பிற கார்ட்டூன்களுக்காக ரச்சிதா மீது நீதிமன்ற அவமதிப்பு புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, குணால் கம்ரா மற்றும் ரச்சிதா தனேஜாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என சில சட்ட மாணவர்கள், வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் வியாழன் அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

“மன்னிப்பு கேட்க முடியாது (போடா)” – நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா

அப்போது, நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் நிஷாந்த் கட்னேஷ்வர்கரின் வாதத்தை கேட்டுவிட்டு, குணால் கம்ராவுக்கும், ரச்சிதாவுக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்குவது குறித்து நாளை (வெள்ளியன்று) முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, இன்று, குணால் கம்ரா மற்றும் ரச்சிதா தனேஜா ஆகிய இருவருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தொடங்கியிருக்கும் உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அர்னாப் ஜாமீன் விவகாரம் – மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறியது என்ன?

நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய நீதிபதிகளின் அமர்வு ‘ஏன் உங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது’ எனக் கேட்கும்  காரணக் கேட்பு குறிப்பாணையை ( show-cause notice), குணால் கம்ரா மற்றும் ரச்சிதா தனேஜாவிற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த குறிப்பாணைக்கு அவர்கள் ஆறு வார காலத்திற்குள் பதிலளிக்கப்பட வேண்டும் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அர்னாப் கோஸ்வாமிக்கு முன்னுரிமை – 6 மனுக்களை ஒரே வாரத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம்

முன்னதாக “நீதிமன்றத்தை விமர்சித்து பதிவிட்டிருக்கும் ட்வீட்களுக்காக மன்னிப்பும் கேட்க முடியாது, ட்வீட்களை நீக்கவும் முடியாது, விசாரணை நேரத்தில், நீதிமன்றத்தில் இருப்பதற்கு பதிலாக, தன்னார்வலராக வேறு எங்காவது தொண்டு செய்யவே விரும்புகிறேன்” என குணால் கம்ரா ட்விட்டரில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்