அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறதா என ஆராய்ந்து இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட வேண்டும் எனச் சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.
கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் (COIMBATORE CONSUMER CAUSE) என்கிற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின்போது உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது,
அந்த மனுவில் தேர்தலின்போது கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கை தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்து விதி மீறல் நடந்திருந்தால் தகுந்த உத்தரவிட வேண்டும் எனக் கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் அறிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடக் காலதாமதம் ஆகியுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் விரைவாக ஆராய்ந்து அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீதான விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு , தேர்தல் அறிக்கைகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா எனத் தேர்தல் முடிவுகள் வெளியான 2 மாதங்களில் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.