Aran Sei

மரண தண்டனை வேண்டாம் – உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

குற்றத்தின் தீவிரத்தைக் கொண்டு மரண தண்டனை விதிக்க வேண்டாம். கைதியின் உயிரை காப்பாற்ற மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா என்று இந்தியாவில் உள்ள அனைத்து நீதிபதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதி கான்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாஜக சிதைக்கிறது என்கிறார்களே ஸ்டாலினும் மம்தாவும்? – பிரதமர் மோடியோடு நேர்காணல்

குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தகுந்த தண்டனைகளை வழங்க வேண்டும் என்று சமூக நிர்ப்பந்தங்களைச் சமாளிப்பதற்காக மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டதாக இருந்தாலும் அவரின் உயிரைக் காப்பாற்றுவதிலும், சமூகத்தின் பிற சமூகக் காரணங்களுக்கும் கூட்டு மனசாட்சிக்கும் சேவை செய்யவும் வேண்டியுள்ளது என்று இந்த தீர்ப்பை எழுதிய தினேஷ் மகேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் 2 கீழமை நீதிமன்றங்களும் குற்றத்தின் தீவிரத்தைக் கணக்கில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கும் முன் அவரின் உயிரைக் காப்பாற்ற ஏதேனும் வாய்ப்புள்ளதா என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.,

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்