Aran Sei

கொரோனா அதிகம் பரவுவதால் பெருமளவில் மக்கள் கூடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

credits : pti

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காமலோ, உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காமலோ இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரவை வெளியிட்ட நீதிபதி சந்திரா சூட் தலைமையிலான அமர்வு, நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடம் ஒதுக்குவது குறித்து மத்திய அரசு இரண்டு வாரத்திற்குள் கொள்கை வகுக்க வேண்டுமெனவும், அதை மாநில அரசுகள் கட்டாயம் பின்பற்றவேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா உயிர்காக்கும் மருத்துவ வசதிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க வேண்டும் – சஞ்சய் ரவுட் வேண்டுகோள்

மேலும், கொரோனா இரண்டாம் அலையின்போது பெரும்பாலான நோயாளிகள் படுக்கை வசதியுள்ள மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தவித்ததாகவும் உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாக என்டிடிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, “ஒவ்வொரு மாநில அரசுகளும், “உள்ளூர் நிர்வாகங்களும் மருத்துவமனையில் அனுமதிக்க வேறுபட்ட முறைகளைப் பின்பற்றுகிறது. இது  மருத்துவமனையை நோயாளிகள் அணுகுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே எந்தவித காலதாமதமுமின்றி உடனடியாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு மாறுபட்ட விலை ஏன்? – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஆக்சிஜன் இருப்பு குறித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அடுத்த நான்கு நாட்களுக்குள் எவ்வளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. நாளொன்றுக்கு எத்தனை ஆக்சிஜன் சிலிண்டர்கள் மீண்டும் நிரப்பப்படுகின்றன என்பது குறித்து தெரிவிக்க வேண்டுமெனவும் என்டிடிவி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தடைவிதிக்க வேண்டுமெனவும், மேலும், மக்களின் கருத்தின் படி கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை பிறப்பிக்கலாமா என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்